Essonne : தொலைபேசிக்காக மாணவன் மீது கத்திக்குத்து.. இருவர் கைது!!
21 தை 2025 செவ்வாய் 10:26 | பார்வைகள் : 899
லீசே மாணவன் ஒருவர் தாக்கப்பட்டு அவரிடம் இருந்து தொலைபேசி பறிக்கப்பட்டுள்ளது. கத்திக்குத்துக்கு இலக்கான மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Athis-Mons (Essonne ) நகரில் இச்சம்பவம் வெள்ளிக்கிழமை நண்பகலின் பின்னர் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள Clément-Ader உயர்கல்வி பாடசாலையில் பயிலும் 18 வயதுடைய குறித்த மாணவன் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது பிற்பகல் 3.3.0 மணி அளவில் அவரை இரு இளம் நபர்கள் நெருங்கியுள்ளனர்.
பின்னர் மாணவனுக்கு கத்தியால் குத்தி, அவரை வீழ்த்திவிட்டு அவரிடம் இருந்த தொலைபேசியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் காயமடைந்த மாணவனை மீட்டு பரிஸ் 13 ஆம் வட்டாரத்தில் உள்ள Pitié-Salpêtrière மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அதேவேளை, தாக்குதல் நடத்திய இருவரையும் ஒரு சில நிமிடங்களிலேயே காவல்துறையினர் கைது செய்தனர். கொள்ளையிடப்பட்ட தொலைபேசியும் மீட்கப்பட்டது.