Paristamil Navigation Paristamil advert login

வெந்நீரில் குளிப்பதால் ஆபத்தா..?

வெந்நீரில் குளிப்பதால்  ஆபத்தா..?

21 தை 2025 செவ்வாய் 10:49 | பார்வைகள் : 667


பலருக்கு வெந்நீரில் குளிக்கும் பழக்கம் இருக்கும். ஆனால் அது திருமண வாழ்க்கையை பாதிக்கும் என்று யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சமீப காலமாக பலர் கருவுறுதல் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.அதில் வெந்நீரில் குளிப்பதும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது.

 ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும், இந்த பிரச்சினைகள் பல காரணங்களுக்காக ஏற்படலாம். பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அதற்கான தீர்வுகளை ஆராய்வது முக்கியம். குறிப்பாக ஆண்களுக்கு விந்தணுவின் தரம் மற்றும் அளவு முக்கிய பிரச்சனையாக உள்ளன.

 பெண்களின் கருவுறாமைக்கு ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் கருப்பை பிரச்சனைகள் என பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் முக்கியமாக ஆண்களுக்கு வெந்நீரில் குளிப்பது கருவுறுதலில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

வெந்நீரில் குளிப்பது உடலில் சில மறைமுக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அதிக வெப்பநிலை விந்தணுக்களின் குளிர்ச்சியைக் குறைத்து விந்தணு உற்பத்தியைப் பாதிக்கிறது. விரைகள் இயற்கையாகவே உடலின் மற்ற பகுதிகளை விட சற்று குளிர்ச்சியாக இருக்கும். இருப்பினும், சூடான நீர் விந்தணுக்களின் வெப்பநிலையை அதிகரிக்கிறது மற்றும் விந்தணுக்களின் தரத்தை குறைக்கிறது.

மேலும், அதிக வெப்பநிலை உடலில் உள்ள ஹார்மோன் சமநிலையை சீர்குலைக்கிறது. இது கருவுறுதலைக் குறைக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது. ஹார்மோன் சமநிலையின்மை விந்தணு உற்பத்தியில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். வெந்நீரில் குளிப்பதும் நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைக்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.