போதைப்பொருள் கடத்தல் : மார்செயில் மட்டும் சென்ற ஆண்டு 20 பேர் சுட்டுக்கொலை!!
21 தை 2025 செவ்வாய் 15:20 | பார்வைகள் : 972
போதைப்பொருள் கடத்தல்காரர்களிடையே இடம்பெற்றும் துப்பாக்கிச்சூடுகளுக்கு பெயர் போன நகரம் மார்செய் ஆகும். சென்ற 2024 ஆம் ஆண்டு அங்கு 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த எண்ணிக்கை முந்தைய 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் பாரிய வீழ்ச்சி என சொல்லப்படுகிறது. போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடைய 49 பேர் 2023 ஆம் ஆண்டில் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர்.
குறித்த மாவட்டம் அமைந்துள்ள Bouches-du-Rhône மாகாணம் முழுவதிலும் சேர்த்து மொத்தமாக 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், கொலை மற்றும் கொலை முயற்சி காரணமாக 60 வெவ்வேறு விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தலில் தொடர்புட 587 பேர் சென்ற ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் 318 பேர் DZ Mafia எனப்படும் ஒரு போதைப்பொருள் விற்பனை அமைப்புடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.