பரிசில் சில அழகிய வீதிகள்!!
25 பங்குனி 2018 ஞாயிறு 10:30 | பார்வைகள் : 18497
சில புகைப்படங்களை பார்த்து நாம் வாயை பிளப்பதுண்டு... 'அடடே.. இதுமாதிரியான அழகான இடம் எங்குதான் உண்டோ?' என... அழகழகாய் புகைப்படங்களை எடுத்து உங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி கலக்க சில அட்டகாசமான வீதிகளை உங்களுக்கு அறியத்தருகிறோம்..
01) 48 boulevard Clichy - 75018 Paris
எனும் முகவரியில் உள்ள CITÉ DU MIDI வீதியை கூகுளில் தேடி, ‘பின்’ செய்துகொள்ளுங்கள்.. பரிசில் மிக அழகான வீதி என சுருக்கமாக சொல்லலாம். வீதியின் இரண்டு பக்கங்களிலும் பச்சை பசேல் என செடிகள் மரங்கள், பூக்கள் என அணிவகுத்து இருக்கிறது. தவிர மிக மிக அமைதியான வீதியாகவும் இது உள்ளது.
02) 104-106 rue Oberkampf - 75011 Paris
பரிசில் உள்ள மற்றுமொரு அழகான வீதி.. இரு புறங்களிலும் சீரான அழகா வர்ணம் பூசப்பட்ட வீடுகளும், தரையில் கற்கள் பதிக்கப்பட்ட வீதியும் உங்களை 'வாவ்..!' போட வைக்கும்..! குறிப்பாக வீட்டின் கூரையில் தொடர்ச்சியாக தொங்கிக்கொண்டிருக்கும் பச்சைப்பசேல் கொடிகள் மேலும் அழகு சேர்க்கிறது..
03) 154 rue Oberkampf - 75011 Paris
அருகிலேயே உள்ளது இந்த வீதி. இதுவும் 'கொள்ளை' அழகு தான். இந்த வீதியில் உள்ள 'ஸ்பெஷல்' என்னவென்றால்.. இரு புறங்களிலும் அடுக்கப்பட்டுள்ள பூச்செடிகள் தான். சிவப்பு மஞ்சள் என பல வர்ணங்களில் பூத்து குலுங்கும் பூக்கள் அழகோ அழகு.
04) SQUARE DES PEUPLIERS - 75008 Paris
பரிஸ், எட்டாம் வட்டாரத்தில் உள்ள இப்பகுதியை வீதி என சொல்ல முடியாது. ஒரு குச்சு ஒழுங்கை என்று சொல்லலம்.
இரு புறங்களிலும் அழுக்குப்படிந்த அரை மதில்களும், அதன் தொடர்ச்சியாக உள்ள துரு ஏறிய கம்பிகளும்.. அதன் மேலே படர்ந்துள்ள கொடிக்ளும், வீதியின் கூரை போல் இருக்கும் மரக்கிளைகளும், வீதியில் கொட்டப்பட்டிருக்கும் சருகுகளும் இந்த வீதிக்கு ஒரு 'க்ளாசிக்' லுக் தருகிறது.
எது.. அழுக்குப்படிந்த மதிலா... என ஆச்சரியமாக எண்ணாதீர்கள்... அதை நேரில் சென்று பாருங்கள்...
இந்த வீதிகள் அனைத்தும் உங்களுக்கு அட்டகாசமான புகைப்படங்கள் எடுக்க, குறிப்பாக காதலர்களுக்கு அட்டகாசமான ஒரு இடம். தவற விடாதீர்கள்!!