ஐரோப்பா-வட ஆப்பிரிக்காவை இணைக்கும் திட்டத்திற்கு 5 நாடுகள் ஒப்பந்தம்
21 தை 2025 செவ்வாய் 15:25 | பார்வைகள் : 507
வட ஆப்பிரிக்காவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் ஹைட்ரஜன் குழாய் திட்டத்தை செயல்படுத்த இத்தாலி, ஜேர்மனி, ஆஸ்ட்ரியா, துனிசியா மற்றும் அல்ஜீரியா ஆகிய நாடுகள், ஒப்பந்தம் செய்துள்ளன.
இந்த திட்டமானது "SouthH2 Corridor" என அழைக்கப்படுகிறது. இந்த திட்த்திற்கு 5 நாடுகள் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
இது மத்திய தரைக்கடலின் தென்கரையில் தயாரிக்கப்படும் பசுமை ஹைட்ரஜனை (green hydrogen) ஐரோப்பாவுக்கு வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்தாலியின் எரிசக்தி மற்றும் வெளியுறவு அமைச்சகங்கள் ஏற்பாடு செய்த உச்சிமாநாட்டில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியது.
இதில் இத்தாலிய எரிவாயு நெடுஞ்சாலை நிறுவனமான Snam உள்ளிட்ட பல நிறுவனங்கள் பங்கேற்றன.
இந்த குழாய் திட்டம் ஐரோப்பியக் குழுமத்தால் "Projects of Common Interest" (PCI) பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதால், இது முக்கிய வளர்ச்சி முயற்சியாக கருதப்படுகிறது.
இந்த திட்டம் எரிசக்தி துறையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்துவதோடு, தென்கிழக்கு ஐரோப்பாவிற்கும் வட ஆப்பிரிக்காவிற்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.