எரிபொருள் விலைகள் மீண்டும் ஏற்றம் கண்டுள்ளன. காரணம் என்ன?

21 தை 2025 செவ்வாய் 17:38 | பார்வைகள் : 5523
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து படிப்படியாக எரிபொருட்களின் விலை ஏற்றம் கண்டு வருகிறது. உதாரணமாக செப்டம்பர் மாதத்தில் 1,59 யூரோக்களாக இருந்த டீசலின் விலை இன்று 1,78 யூரோக்களாக உயர்ந்துள்ளது, அதே சமயம் பெற்றோளின் விலை அண்ணளவாக 1,73 யூரோக்களில் இருந்து 1,80 யூரோக்களாக அதிகரித்து உள்ளது.
இந்த நிலையிலை வாகன ஓட்டிகளை, பயணங்களை மட்டுப்படுத்தி, சிக்கனமான வாகனம் ஓட்டும் பழக்கத்தை கடைப்பிடிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்னும் நிலைக்கு தள்ளி உள்ளது.
இந்த விலையேற்றத்திற்கு காரணமாக ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் குறைந்த வெப்பநிலை நிலவுவது, எண்ணெய் தேவையை அதிகரிக்க வழிவகுத்தது. அத்தோடு பதட்டமான புவிசார் அரசியல் சூழலில் ஏற்படும் அதிகரிப்பும் காரணம் என கூறப்படுகிறது. இருந்தாலும் எதிர்வரும் வாரங்களில் விலையேற்றம் என்பது மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1