பரிஸ் : ஒரு விநாடி கூட சூரிய ஒளி பதிவாகவில்லை!!
21 தை 2025 செவ்வாய் 17:50 | பார்வைகள் : 1374
தலைநகர் பரிசில் கடந்த ஒருவாரத்தில், ஒரு விநாடி கூட சூரிய ஒளி பதிவாகவில்லை என Météo France அறிவித்துள்ளது.
ஜனவரி 15, புதன்கிழமை முதல் - ஜனவரி 20 திங்கட்கிழமை வரையான ஆறு நாட்களில் ஒரு விநாடி கூட சூரிய ஒளி பரிசில் தென்படவில்லை. இலை உதி காலம் ஆரம்பித்ததில் இருந்து இது மூன்றாவது தடவையாக இடம்பெறுகிறது. முன்னதாக டிசம்பர் 28 முதல் ஜனவரி 2 ஆம் திகதி வரையான நாட்களிலும், ஜனவரி 8- 12 வரையான நாட்களிலும் அவ்வாறே பதிவானது.
இது ஒரு விதிவிலக்கான காலநிலை எனவும், பரிசின் வானம் கிட்டத்தட்ட ஒரு மாதகாலமாக ‘சாம்பல்’ பூத்து இருளடைந்து காணப்படுவதாக Météo France தெரிவிக்கிறது.
1999 - 2000 மற்றும் 2023 - 2024 ஆகிய இலையுதிர் காலப்பகுதியில் இவ்வாறான நாட்கள் இதுவரை 25 தடவைகள் பதிவாகியுள்ளன.