Paristamil Navigation Paristamil advert login

பாலியல் வழக்குகள், தன் வரலாற்றை இழந்த "Fondateur Abbé Pierre"

பாலியல் வழக்குகள், தன் வரலாற்றை இழந்த

21 தை 2025 செவ்வாய் 18:21 | பார்வைகள் : 1067


'Emmaüs: என்னும் தொண்டு நிறுவனம்  உலகில் 41 நாடுகளில் இயங்கி வருகிறது. 1949-ம் ஆண்டு பிரான்சில் Abbé Pierre (Henry Grouès) என்பவரால் நிறுவப்பட்டது. முடிந்தவரை தனது முயற்சியால் பொருளாதாரத்தையீட்டி அதில் வரும் இலாபத்தில் வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு உதவிகளை புரிந்து வருகிறது.

Emmaüs நிறுவனம் தனது இலச்சினையில் (logo) சூரியனால் அலங்கரிக்கப்பட்ட நீல சதுரத்தின் கீழ் அதன் நிறுவனர் Abbé Pierre அவர்களின் பெயரை 'Fondateur Abbé Pierre' என வடிவமைத்து இருந்தது. Emmaüs நிறுவனத்தின் நிறுவனர் Abbé Pierre 2007-ம் ஆண்டு சாவடைந்தார். இந்த நிலையில் இன்று கூடிய நிறுவனத்தின் பொதுக்கூட்டத்தில் தங்களின் இலச்சினையிலிருந்து நிறுவனரின் பெயரை அகற்றியுள்ளது.

நிறுவனர் Abbé Pierre அவர்கள் மீது 33 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகி இன்றைய நாட்களில் இரண்டாம் கட்ட விசாரணைகள் பிரான்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் Emmaüs நிறுவனம் மேற்குறிப்பிட்ட முடிவினை எடுத்துள்ளது.