Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

அமைச்சர் துரைமுருகனின் மகன் கல்லூரியில் ரூ.13 கோடி கரன்சி

அமைச்சர் துரைமுருகனின் மகன் கல்லூரியில் ரூ.13 கோடி கரன்சி

22 தை 2025 புதன் 03:15 | பார்வைகள் : 6959


அமைச்சர் துரைமுருகனின் மகனும், தி.மு.க., - எம்.பி.,யுமான கதிர் ஆனந்த் நடத்தும் கல்லுாரியில் இருந்து, 13.07 கோடி ரூபாயும், அவரது வீட்டில் இருந்து, 75 லட்சம் ரூபாயும், அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

தி.மு.க., பொதுச்செயலராகவும், அமைச்சராகவும் இருப்பவர் துரைமுருகன். இவரது மகன் கதிர் ஆனந்த்; வேலுார் தொகுதி தி.மு.க., - எம்.பி.,யாக இருக்கிறார்.

சொத்து குவிப்பு

அந்த தொகுதியில், 2019ல் கதிர் ஆனந்த் போட்டியிட்ட போது, தன் பெயரிலும், மனைவி சங்கீதா, மகள்கள் செந்தாமரை, இலக்கியா, மகன் இளவரசன் ஆகியோர் பெயரிலும், 88.80 கோடி ரூபாய்க்கு அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் இருப்பதாக, வேட்பு மனுவில் தெரிவித்திருந்தார்.

தேர்தலின் போது, வாக்காளர்களுக்கு பணம் தருவதற்காக, துரைமுருகனுக்கு நெருக்கமான பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான கிடங்கில் பதுக்கி வைத்திருந்த, 11 கோடி ரூபாயை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

அதன் அடிப்படையில், அமலாக்கத்துறை அதிகாரிகளும் சட்ட விரோத பண பரிமாற்றம் குறித்து வழக்கு பதிவுசெய்து, தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

கதிர் ஆனந்த் எம்.பி.,யானதில் இருந்து, அவரின் மனைவி, மகள்கள் சொத்து மதிப்பு பல மடங்கு அதிகமாகி இருப்பதையும் கண்டறிந்தனர்.

சம்மன்

அதைத்தொடர்ந்து, காட்பாடி காந்தி நகரில் உள்ள கதிர் ஆனந்த் வீடு மற்றும் கிறிஸ்டியன் பேட்டையில் உள்ள அவருக்கு சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லுாரி ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள், 44 மணி நேரம் சோதனை நடத்தினர்.

இச்சோதனையில், கதிர் ஆனந்த் கல்லுாரியில் இருந்து, 13.07 கோடி ரொக்கம் மற்றும் வீட்டில் ரகசியமாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த இடத்தை உடைத்து, அங்கிருந்த, 75 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சொத்து ஆவணங்கள் மற்றும், 'டிஜிட்டல்' ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.இந்த பணம் குறித்து விளக்கம் அளிக்க சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி கதிர் ஆனந்திற்கு, 'சம்மன்' அனுப்பப்பட்டு உள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்