துருக்கி ஹோட்டலில் பயங்கர தீ விபத்து - 70 பேர் பலி
22 தை 2025 புதன் 08:37 | பார்வைகள் : 316
துருக்கியின் பொலு மலைபகுதியில் அதிகளவாக சுற்றுலாப் பயணிகளை காண முடியும்.
பிரபலான ஹோட்டலில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
துருக்கியின் பொலுமலைப்பகுதியில் உள்ள சுற்றுலாப்பயணிகளிற்கு பிரபலமான ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் தொகை 70 ஆக அதிகரித்துள்ளது.
மரகூரைகளை கொண்ட 12மாடிஹோட்டலில் தீவிபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மலை உச்சியில் அமைந்துள்ள கிரான்ட் கார்ட்டெல் ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டது,நள்ளிரவில் உணவகம் அமைந்துள்ள பகுதியில் மூண்ட தீ வேகமாக பரவியுள்ளது.தீயணைப்பு வீரர்கள் உடனடியாக நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீபரவியமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
234 பேர் அந்த ஹோட்டலில் தங்கியிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன
தீயிலிருந்து தப்பிப்பதற்காக பலர் தங்கள் படுக்கைவிரிப்புகளை பயன்படுத்தி மாடிகளில் இருந்து பாய்ந்துள்ளனர்.
மேலேயிருந்து குதித்ததில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர் என பொலுமலைப்பகுதியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
ஹோட்டலின் கூரையும் மேல்தளங்களும் தீப்பிடித்து எரிவதை வீடியோக்கள் காண்பித்துள்ளன.
அது ஊழிக்காலம் போலயிருந்தது,மிகவேகமாக அரைமணித்தியாலத்திற்குள் ஹோட்டல் தீயில் முழுமையாக சிக்குண்டது என தீவிபத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் பதற்றத்துடன் மேலேயிருந்து குதிக்க முயன்றனர்,ஒருவர் 11வது தளத்திலிருந்து குதித்தார் ஆண்டவன் அவரை காப்பாற்றவேண்டும் என அருகில் உள்ள மற்றுமொரு ஹோட்டலின் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.