'ஃபஷன் ஷோ' பார்க்கலாம் வாங்க!!

23 பங்குனி 2018 வெள்ளி 13:30 | பார்வைகள் : 20629
உலகுக்கே நாகரீகங்களை அறிமுகப்படுத்திக்கொண்டிருப்பது பரிஸ் தானே...? அதிலும், 'பரிஸ் ஃபஷன் ஷோ!' என்றால் உலக பிரபலம்... வாங்களேன்... ஒரு ஃபஷன் ஷோ பாத்துட்டு வரலாம்...
உலகில் இருக்கும் மிகச்சிறந்த வணிக வளாகங்களில் ஒன்று Galeries Lafayette. எங்கள் பரிசில் உள்ளது. சொப்பிங் தவிரவும் இங்கு செய்வதற்கு பல விஷயங்கள் உள்ளது. அதில் ஒன்று தான் ஃபஷன் ஷோ பார்ப்பது.
வருடத்தில் ஒவ்வொரு காலத்துக்கும் ஏற்றால் போல் மிக நவீனமான ஆடைகளை தொடர்ச்சியாக அறிமுகப்படுத்திக்கொண்டே இருப்பார்கள். ஆண் மொடல்களும், பெண் மொடல்களும் அணிவகுத்து பல புதிய வடிவிலான நவீன ஆடைகளை உங்களுக்கு அறிமுகப்படுத்துவார்கள்.
அருகிலேயே விற்பனை கூடமும், உள்ளாடைகளுக்கான பிரத்யேக காட்சியறையும் உண்டு. சில நூறு யூரோக்களை நீங்கள் அள்ளி 'விளாசி தள்ளுவீர்கள்!' என்றால், ஒரு விஸிட் அடித்துத்தான் பாருங்களேன்...
வளாகத்தின் நான்காவது தளத்துக்குச் சென்றால் 'ஒபேரா' வாசல் உங்களை வரவேற்கும்... அங்குதான் ஃபஷன் ஷோக்கள் இடம்பெறுகிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 3 மணிக்கு இங்கு 30 நிமிட ஃபஷன் ஷோ இடம்பெறுகிறது.
12 வயதுக்குட்பட்டவர்களுக்கு 9 யூரோக்களும், 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 12 யூரோக்களும் கட்டணமாக அறவிடப்படும். ஆனால் முன்பதிவுகள் செய்பவர்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும்.
முகவரி : 40 Boulevard Haussmann, 75009 Paris,
தொலைபேசி : +3 31 42 82 34 56
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025