Paristamil Navigation Paristamil advert login

Livret A : வட்டியாக வழங்கப்பட்ட €16.8 பில்லியன் யூரோக்கள்!!

Livret A : வட்டியாக வழங்கப்பட்ட €16.8 பில்லியன் யூரோக்கள்!!

22 தை 2025 புதன் 09:13 | பார்வைகள் : 857


பிரபலமான சேமிப்புக்கணக்கான Livret A இற்கு, சென்ற 2024 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட €17 பில்லியன் யூரோக்கள் வட்டி வழங்கப்பட்டுள்ளன.

பிரெஞ்சு மக்களின் சேமிப்பு பழக்கம் அதிகரித்து வருவதாக பிரெஞ்சு சேமிப்புகளுக்கான வங்கி (Caisse des dépôts et consignations) அறிவித்துள்ளது. Livret A மற்றும் Livret de développement durable et solidaire (LDDS) ஆகிய இரு கணக்குகளையும் சேர்த்து 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரையான நிலவரப்படி €603.1 பில்லியன் யூரோக்கள் சேமிப்பில் இருப்பதாகவும், 2023 ஆம் ஆண்டு முடிவின் போது இருந்த தொகையை விட €38.2 பில்லியன் யூரோக்கள் அதிகமாகும் (+6.8%) எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, சேமிப்புக்கணக்கின் வட்டியாக மட்டும் சென்ற ஆண்டில் €16.80 பில்லியன் யூரோக்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.