Paristamil Navigation Paristamil advert login

நன்றாக விளையாடியிருந்தால் இடம் கிடைத்திருக்கும் - சூர்யகுமார் யாதவ்

நன்றாக விளையாடியிருந்தால் இடம் கிடைத்திருக்கும் - சூர்யகுமார் யாதவ்

22 தை 2025 புதன் 09:28 | பார்வைகள் : 336


நன்றாக விளையாடியிருந்தால் இடம் கிடைத்திருக்கும்! அதை நினைக்கும்போது வருத்தமாக உள்ளது - சூர்யகுமார் யாதவ்

இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் விளையாட முடியாதது வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தான் மற்றும் அமீரகத்தில் சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது.

இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ரோஹித் ஷர்மா அணித்தலைவராக அறிவிக்கப்பட்டார். 

விராட் கோஹ்லி, கில், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றிருந்தாலும், துடுப்பாட்ட வீரர் சூர்யகுமார் யாதவிற்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. 

இந்த நிலையில் தான் சரியாக விளையாடவில்லை என சூர்யகுமார் யாதவ் ஒப்புக்கொண்டுள்ளார். 

இதுதொடர்பாக அவர் கூறுகையில், "நான் நன்றாக விளையாடி இருந்தால், சாம்பியன்ஸ் டிராஃபி தொடருக்கான அணியில் இடம்பெற்று இருப்பேன். சரியாக விளையாடாததை ஒப்புக்கொள்ள வேண்டும்.

தற்போதுள்ள அணியில் அனைவரும் சிறப்பாக விளையாடுபவர்கள். அவர்களுக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். இருந்தாலும் நான் நன்றாக விளையாடாததை நினைக்கும்போது வருத்தமாக உள்ளது!" என தெரிவித்துள்ளார்.