Paristamil Navigation Paristamil advert login

வாட்ஸ்அப்பில் பிறப்பு, இறப்புச் சான்றிதழை பெற முடியும்...

 வாட்ஸ்அப்பில் பிறப்பு, இறப்புச் சான்றிதழை பெற முடியும்...

22 தை 2025 புதன் 10:39 | பார்வைகள் : 331


நீங்களோ அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர்களோ பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்களைப் பெறுவதற்காக அரசு அலுவலகங்களைச் சுற்றி வந்துக்கொண்டு இருக்கிறீர்களா?

ஆனால் இப்போது இந்தச் சிரமங்களைக் குறைக்க, ஆந்திரப் பிரதேச அரசு ஒரு சிறந்த திட்டத்தைத் தொடங்கப் போகிறது.

அதன் பிறகு உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உங்கள் தொலைபேசியில் பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழைப் பெறலாம்.

ஆந்திரப் பிரதேச அரசு விரைவில் தனது 'WhatsApp Governance Services'கீழ் பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்களை வாட்ஸ்அப் மூலம் வழங்கவுள்ளது. 


இதை திங்கள்கிழமை (ஜனவரி 20) அறிவித்த தலைமைச் செயலாளர் கே.விஜயானந்த் இந்த சேவைக்கான ஒரு முன்னோடித் திட்டம் இந்த மாத இறுதியில் தெனாலியில் நடத்தப்படும் என்றும், இதன் செயல்முறையை அறிய இது உதவும் என்றும் அவர் கூறினார். 

"முதல்வர் என். சந்திரபாபு நாயுடுவின் நோக்கங்களுக்கு ஏற்ப மாநில அரசு விரைவில் மக்களுக்கு வாட்ஸ்அப் நிர்வாக சேவைகளை வழங்கும். இதன் கீழ், மக்கள் விரைவில் பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்களை வாட்ஸ்அப் மூலம் பெற முடியும்" என்று விஜயானந்த் ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.  

இந்த செயல்முறை குறித்த மறுஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளுடன் ரியல்-டைம் கவர்னன்ஸ் சொசைட்டி (RTGS) அலுவலகத்தில் நடைபெற்றது.  

வாட்ஸ்அப் ஆளுகையை அறிமுகப்படுத்துவதன் மூலம் அரசு சேவைகளை மேலும் அணுகக்கூடியதாகவும் வசதியாகவும் மாற்றுவதே முதலமைச்சர் நோக்கமாக இருப்பதாக விஜயானந்த் வலியுறுத்தினார்.


இந்த செயல்முறையை விரைவுபடுத்துமாறு RTGS மற்றும் தொடர்புடைய துறைகளின் அதிகாரிகளை அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த முயற்சியை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு பஞ்சாயத்து ராஜ், சுகாதாரம் மற்றும் நகராட்சி நிர்வாகத் துறைகள் RTGS அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

மக்களின் வசதிக்காக மாநில அரசு புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.