கைகளால் தயாரிக்கப்படும் காவிக்கண்டைகள்!!
22 பங்குனி 2018 வியாழன் 10:30 | பார்வைகள் : 18145
காவிக்கண்டை குழந்தைகளுக்கு மட்டுமானதா? ஐரோப்பாவில் இல்லை. குறிப்பாக பிரான்சில் இல்லவே இல்லை. அது இருக்கட்டும் காவிக்கண்டை என்றால் என்னப்பா.. என நீங்கள் கேட்பது புரிகிறது.... அட சொக்கலேட்டுக்கு (Chocolate) சரியான தமிழ் வார்த்தை அதுதான்!
இருக்கட்டும், பிரான்சில் ஒரு சில 'சொக்கலேட்' நிறுவனங்கள் சொக்கலேட்களை முழுக்க முழுக்க கைகளால் தயாரிக்கப்படுகிறது.. தெரியுமா..?
கலே துறைமுகத்தில் இருந்து ஒருமணிநேரம் பயணித்தால், Beussent சொக்கலேட் தொழிற்சாலை உள்ளது. (நகரின் பெயரும், நிறுவனத்தின் பெயரும் ஒன்றே!!) பிரன்சில் இருக்கும் ஒருசில கைகளால் தயாரிக்கப்டும் சொக்கலேட் நிறுவனங்களில் இது முக்கியமானது. நவீன இயந்திரங்களுக்கு மாறமுடியும் என்றபோதும், மிகவும் சுவையான கைகளால் தயாரிக்கப்படும் சொக்கலேட்களையே இவர்கள் ஆர்வமாக தயாரிக்கின்றார்கள்.
மற்றுமொரு 'ஸ்பெஷல்' என்ன தெரியுமா..?? இவர்கள் தங்களுக்கான 'கொக்கோ'க்களை தாங்களே விளைவிக்கின்றார்கள். Ecuador நாட்டில் உள்ளது இவர்களது கொக்கோ தோட்டம்.
உலகிலேயே சொந்த தோட்டத்தில் சொக்கலேட் தயாரிக்கும் நிறுவனங்கள் மூன்று தான் உள்ளது. மடகாஸ்கர் மற்றும் வெனிசுலாவில் உள்ள இரண்டு நிறுவனங்களோடு, பிரான்சின் Beussent நிறுவனமும் ஒன்று.
அவர்களின் தொழிற்சாலைக்குச் சென்றால், சுவைத்துப்பார்ப்பதற்கு இலவசமாக சொக்கலேட் தருகிறார்கள். அதன்பிறகு நீங்கள் சொக்கலேட்களை அள்ளிச்செல்வீர்கள் என அவர்களுக்கு தெரியும்.
தவிர, 'எங்கள் சொக்கலேட்களை சாப்பிடுவதால் உடம்பு குண்டாகாது!' என ' வாக்குறுதி’ தருகிறார்கள்.
உண்மையில், சொக்கலேட்கள் உடம்பை குண்டாக்காது, சுவைக்காக சேர்க்கப்படும் பல மூலப்பொருட்களே பருமன் ஏற்படுவதற்கு காரணமகிறது. எனவே தான் அவர்கள் இந்த 'வாக்குறுதி' தருகிறார்கள்.
ஞாயிற்றுக்கிழமைகள் தவிர மீதி ஆறு நாட்களும் திறக்கப்படுகின்றது. முகவரி: 66 Route de Desvres, 62170 Beussent.
தொலைபேசி : +3 33 21 86 17 62