Paristamil Navigation Paristamil advert login

Orlybus சேவை நிறுத்தப்படுகிறது!!

Orlybus சேவை நிறுத்தப்படுகிறது!!

22 தை 2025 புதன் 13:00 | பார்வைகள் : 648


14 ஆம் இலக்க மெற்றோ சேவைகள் விஸ்தரிக்கப்பட்டதை அடுத்து, Orlybus பேருந்து சேவைகள் நிறுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

14 ஆம் இலக்க மெற்றோக்கள் தற்போது Aéroport-d'Orly நிலையம் வரை பயணிக்கிறது. இதனால் விமான நிலையங்களை நோக்கி பயணிக்கும் பேருந்துகளான Orlybus மற்றும் Orlyval சேவைகள் போதிய பயணிகள் அற்று பயணிக்கின்றன. கடந்த வாரங்களில் கிட்டத்தட்ட 80% சதவீத பயணிகள் வரத்து வீழ்ச்சியடைந்துள்ளது.

அதை அடுத்து, வரும் மார்ச் 3 ஆம் திகதியுடன் (2025) குறித்த பேருந்து சேவைகள் நிறுத்தப்பட உள்ளதாக Île-de-France Mobilités அறிவித்துள்ளது.