Paristamil Navigation Paristamil advert login

Montreuil : இளம் தாய் பலி.. குழந்தை மருத்துவமனையில் சேர்ப்பு!!

Montreuil : இளம் தாய் பலி.. குழந்தை மருத்துவமனையில் சேர்ப்பு!!

22 தை 2025 புதன் 13:22 | பார்வைகள் : 783


Montreuil (Seine-Saint-Denis) நகரில் உள்ள தங்குமிடமொன்றில் வசித்த இளம் தாய் ஒருவர் பலியாகியுள்ளார். அவரது சடலத்தை காவல்துறையினர் மீட்டு, உடற்கூறு பரிசோதனைகளுக்காக அனுப்பி வைத்தனர். 

தாய் மற்றும் பிள்ளைகளுக்கான பிரத்யேகமான தங்குமிடமான Maison d’accueil mère-enfant (MAME) இல் தங்கியிருந்த 21 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார். நேற்று ஜனவரி 21, செவ்வாய்க்கிழமை அவரது சடலத்தை காவல்துறையினர் மீட்டனர். 

அத்தோடு, அப்பெண்ணின் குழந்தை சம்பவ இடத்தில் தனித்து இருந்ததாகவும், குழந்தை மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பெண்ணின் மரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.