பெயர் பிழையால் கைதில் இருந்து தப்பிய இராமநாதன் அர்ச்சுனா எம்.பி
22 தை 2025 புதன் 13:56 | பார்வைகள் : 304
இராமநாதன் அர்ச்சுனாவை சந்தேகநபராக ஏற்றுக் கொள்ள முடியாது - அனுராதபுரம் பிரதான நீதவான்
அனுராதபுரம் போக்குவரத்து காவல்துறையின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்து அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை சந்தேகநபராக நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதை அனுராதபுரம் பிரதான நீதவான் நாலக சஞ்ஜீவ ஜயசூரிய நிராகரித்துள்ளார்.
சந்தேநபரின் பெயரை அர்ச்சுனா லோச்சன என பி அறிக்கையில் காவல்துறை குறிப்பிட்டுள்ளதாக நீதவான் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இன்றைய தினம் தேசிய அடையாள அட்டையுடன் நீதிமன்றில் முன்னிலையான சந்தேகநபரின் பெயர் இராமநாதன் அர்ச்சுனா என குறிப்பிடப்பட்டுள்ளதாக நீதவான் தெரிவித்துள்ளார்.
இரண்டு பெயரிலும் வித்தியாசம் காணப்படுவதாகவும் இராமநான் அர்ச்சுனாவை சந்தேகநபராக ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் நீதவான் அறியப்படுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் விசாரணையில் உள்ள வழக்கின் சந்தேகநபர் தாம் என கூறி நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நீதிமன்றில் முன்னிலையானதாக நீதிமன்றத்திற்கான எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.