'தளபதி 69' படத்தின் தலைப்பு இதுவா ?
22 தை 2025 புதன் 14:18 | பார்வைகள் : 138
விஜய் நடித்து வரும் ’தளபதி 69’ படத்தின் டைட்டில் வரும் குடியரசு தினத்தன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல் இணையதளங்களில் கசிந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தளபதி விஜய் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ’தளபதி 69’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் தான் விஜய்யின் கடைசி படம் என்று கூறப்படும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் அவர் தீவிர அரசியலில் குதிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வரும் 26ஆம் தேதி குடியரசு தினத்தில் ’தளபதி 69’ படத்தின் டைட்டில் உடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு ’நாளைய தீர்ப்பு’ என்ற டைட்டில் வைக்க வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறப்படுகிறது.
விஜய் நடித்த முதல் படத்தின் டைட்டில் தான் ’நாளைய தீர்ப்பு’ என்ற நிலையில் அவருடைய கடைசி படத்தின் டைட்டிலும் ’நாளைய தீர்ப்பு’ என்று இருந்தால் டைட்டில் பொருத்தமாக இருக்கும் என்று படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
33 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் நடித்த முதல் மற்றும் ஸ்பெஷல் படமான ’நாளைய தீர்ப்பு’ படத்தின் டைட்டில் தான் ’தளபதி 69’ படத்திற்கும் வைக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்