சூர்யாவின் ‘வாடிவாசல்’ அதிகாரபூர்வ அறிவிப்பு எப்போது ?
22 தை 2025 புதன் 14:20 | பார்வைகள் : 304
நடிகர் சூர்யா, கங்குவா படத்தின் ரிலீஸுக்கு பிறகு ரெட்ரோ, சூர்யா 45 ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதற்கிடையில் இவர், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார்.
அதன்படி இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து அமீர் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றன. அடுத்தது இந்த படம் ஜல்லிக்கட்டு தொடர்பான கதைக்களம் என்பதால் ஏற்கனவே நடிகர் சூர்யா, மாடுபிடி வீரர்களுடன் இணைந்து சில பயிற்சிகளை மேற்கொண்டார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு 2025 ஏப்ரல் மாதத்தில் தொடங்கி 2025 டிசம்பர் மாதத்திற்குள் முடிவடைந்துவிடும் என சொல்லப்படுகிறது.
ஆகையினால் இந்த வருடத்திற்குள் இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வாடிவாசல் திரைப்படத்தை திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டு வருவதாக தெரியவந்துள்ளது. இருப்பினும் படக்குழு சார்பில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.