வீர தீர சூரன் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது
22 தை 2025 புதன் 14:32 | பார்வைகள் : 276
சியான் விக்ரம் நடித்த ‘வீர தீர சூரன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தொழில்நுட்ப பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வந்தன. இந்த நிலையில் இந்த படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் தற்போது ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.
‘வீர தீரன் சூரன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தான் முதலில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த படம் வரும் மார்ச் 27ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் காளி என்ற கேரக்டரில் விக்ரம் நடித்துள்ள நிலையில் மார்ச் 27ஆம் தேதி காளி உங்களை தியேட்டரில் சந்திக்க வருகிறார் என்ற விளம்பரத்துடன் கூடிய போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
விக்ரம் ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ள இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சூரஜ் ,சித்திக் உள்பட பலரும் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி நடித்த ’பண்ணையாரும் பத்மினியும்’ ’சேதுபதி’ ’சிந்துபாத்’ மற்றும் சமீபத்தில் வெளியான ‘சித்தா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார் இந்த படத்தை இயக்கி உள்ளார்.
ஜிவி பிரகாஷ் இசையில், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில், பிரசன்னா படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது மார்ச் 27 என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து விக்ரம் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.