கடலுக்கடியில் சென்று மோதிரம் மாற்றி திருமணம் செய்துகொண்ட தம்பதியினர்!

22 தை 2025 புதன் 14:53 | பார்வைகள் : 3186
ஆழ்கடலில் நீருக்கடியில் சென்ற ஒரு ஜோடி மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
தற்போதைய காலத்தில் படகிலோ அல்லது விமானத்திலோ திருமணம் செய்து கொண்டு வைரலாகி வருகின்றனர். ஆனால், இங்கு ஒரு ஜோடி கடலுக்கடியில் திருமணம் செய்துள்ளனர்.
புதுச்சேரியில் உள்ள முருங்கப்பாக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஜான் டி பிரிட்டோ மற்றும் தீபிகா. இவர்கள் இருவரும், கடல் மாசு விழிப்புணர்வு, கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாப்பு ஆகிய விடயங்களை வலியுறுத்தி ஆழ்கடலுக்கு சென்று நீருக்கடியில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.
அதற்காக அவர்கள் டெம்பிள் அட்வென்சர் ஆழ்கடல் பயிற்சியாளர் அரவிந்த் உதவியுடன் புதுச்சேரி தேங்காய்திட்டில் இருந்து 5 கி.மீ. தொலைவில் கடலுக்கு சென்றனர்.
அங்கு அவர்களுக்காக 50 அடி ஆழத்தில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றது. தென்னை ஓலையில் பூக்கள் இணைத்து திருமண நிகழ்வு நடத்தினர்.
பின்னர், கடலுக்கடியில் சென்று மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர். அவர்களுடன் 5 பேர் கடலுக்கடியில் சென்றனர்.
இதுகுறித்து பயிற்சியாளர் கூறுகையில், "முதல்முறையாக நீருக்கடியில் திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும் நீச்சல் வீரர்கள் என்பதால் சிரமம் ஏற்படவில்லை" என்றார்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025