கனடாவில் ரயில் போக்குவரத்து பாதிப்பு - பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
22 தை 2025 புதன் 16:05 | பார்வைகள் : 429
கனடாவில் ரொறன்ரோ நகரின் லைன்1 சுரங்கப் பாதை ரயில் போக்குவரத்து சேவைகள் கடும் குளிர் காரணமாக இடைநிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ரொறன்ரோ பொது போக்குவரத்து சேவைக்கு சொந்தமான ரயில் சேவைகளை இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளன.
ரயில்களை பழுது பார்ப்பதற்காகவும் இவ்வாறு ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக வில்சன் மற்றும் லோரன்ஸ் மேற்கு ரயில் நிலையங்களுக்கிடையிலான சேவை இடைநிறுத்தப்பட்டது.
இந்த இரண்டு ரயில் நிலையங்களுக்கிடையில் விசேட பஸ் சேவை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ல இடங்களில் ரயில் சேவைகள் காலதாமதமானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ரொறன்ரோவில் கடுமையான குளிருடனான காலநிலை நிலவி வருகின்றது.
ரொறன்ரோவின் வெப்பநிலை மறை 18 பாகை செல்சியஸாக காணப்பட்டதாகவும் குளிர் காற்று நிலைமையினால் இந்த வெப்பநிலை சுமார் மறை 28 பாகையாக உணரப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.