Paristamil Navigation Paristamil advert login

Maison de Balzac - இலவசமாய் ஒரு இதிகாச வீடு!!

Maison de Balzac - இலவசமாய் ஒரு இதிகாச வீடு!!

21 பங்குனி 2018 புதன் 11:30 | பார்வைகள் : 17953


பரிஸ் 16 ஆம் வட்டாரத்தில் உள்ள் ஒரு வீடு குறித்து இன்றைய பிரெஞ்சு புதினத்தில் தெரிந்துகொள்ளப்போகிறோம். 

வீடா..?? என ஆச்சரியப்படாதீர்கள்.. வீட்டில் தான் விஷயமே உள்ளது. இதிகாச வீடு என குறிப்பிட்டதுக்கு ஒரு காரணம் உள்ளது. பரிசுக்குள் இருக்கும் வீடுகளில் மிக பழமையான வீடு இதுவாகத்தான் இருக்கவேண்டும். 

பாரதி வாழ்ந்த வீடு என்பது போல், இது பிரெஞ்சு நாவலாசிரியர் Honoré de Balzac வாழ்ந்த வீடு இது. 1840 ஆம் ஆண்டில் இருந்து 1847 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் கட்டப்பட்டுள்ளது இந்த வீடு. 

நாவலாசிரியரின் அமைதியான பழங்காலத்து வீடும் அதன் தோட்டமும் உங்களை ஆச்சரியப்படுத்துவதோடு, மேலும் சில விஷயங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும். 

வீட்டுக்குள் எண்ணற்ற கைப்பிரதிகள், ஓவியங்கள், புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. எழுத்தாளர் Maison de Balzac கைப்பட எழுதிய சில பிரதிகளை அப்படியே பெரிதாக்கி, காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 

பிரெஞ்சு இலக்கியத்துறையில் பெரும் பங்காற்றிய Maison de Balzac நினைவாக, அவரை கெளரவிக்கும் முகமாக எத்தனையோ நெருக்கடிகள் வந்தும் இந்த வீட்டை அதன் பொலிவு மாறாமல் தக்கவைத்துள்ளது அரசு. 

2012 ஆம் ஆண்டு இறுதியாக இவ்வீட்டில் சில மாற்றங்களை கொண்டுவந்திருந்தார்கள். நாங்கள் சொல்வதை விட, நீங்கள் ஒரு எட்டு சென்று பார்த்துவருவதே சிறந்தது. முழுதாக ஒரு மணிநேரம் போதும்.

Passy அல்லது Avenue du Président Kennedy மெற்றோ நிலையங்களில் இறங்கினால் அருகிலேயே உள்ளது. 

முகவரியை தொலைபேசி 'Map' இல் Pin செய்துகொள்ளுங்கள். : 47 Rue Raynouard, 75016 Paris. (திங்கட்கிழமை தவிர, மீதி ஆறு நாட்களிலும் மாலை 5 மணிவரை திறந்திருக்கும்)

சொல்ல மறந்துவிட்டோமே, பார்வையிடுவதற்கு எவ்வித கட்டணங்களும் இல்லை. ஜாலியாக சென்று விஸிட் அடித்துவிட்டு வாருங்கள்!!
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்