ஐக்கிய அரபு அமீரகத்தில் கோல்டன் விசா திட்டம் அறிமுகம்...
22 தை 2025 புதன் 16:56 | பார்வைகள் : 716
ஐக்கிய அரபு அமீரகம் (UAE) தனது கோல்டன் விசா (Golden Visa) திட்டத்தை இன்னும் சில குழுவினருக்கு விரிவுபடுத்தியுள்ளது.
துபாயில் Creators HQ என்ற புதிய முயற்சியின் மூலம் டிஜிட்டல் உள்ளடக்க படைப்பாளர்களை (Digital Content Creators) சேர்த்துள்ளது. இதில், உள்ளடக்க படைப்பாளர்களை, பாட்காஸ்ட் செய்பவர்கள், வீடியோ தயாரிப்பாளர்கள் அடங்குவர்.
இந்த திட்டம் 10 ஆண்டுகளுக்கு புதுப்பிக்கக்கூடிய குடியிருப்பு அனுமதியுடன் உலகின் பல்வேறு இடங்களிலிருந்து படைப்பாளர்களை அமீரகத்திற்கு வர அனுமதிக்கிறது.
2025, ஜனவரி 13 அன்று எமிரேட்ஸ் டவர்ஸ்-ல் தொடங்கப்பட்ட இந்த மையம் படைப்பாளர்களுக்கு தேவையான ஆதரவு மற்றும் வளங்களை வழங்குகிறது.
Meta, TikTok, X உள்ளிட்ட பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்துள்ளது. 20 நாடுகளிலிருந்து ஏற்கனவே 100 பேர் இதில் உறுப்பினராகியுள்ளனர்.
UAE அரசு இந்த திட்டத்திற்காக $40.8 மில்லியன் நிதியை ஒதுக்கியுள்ளது. இது கோல்டன் வீசா விண்ணப்பம், தொழில்கள் பதிவு மற்றும் குடியேற்ற சேவைகளுக்கு உதவுகிறது.
கோல்டன் விசா நன்மைகள்:
- 10 ஆண்டுகள் வரை குடியிருப்பு அனுமதி
- வேலையின்றி பணம் சம்பாதிக்கும் சுதந்திரம்
- முழுமையான தொழில்முதலீட்டு உரிமைகள்
- வரிவிலக்கு மற்றும் மேம்பட்ட மருத்துவ வசதிகள்
கோல்டன் விசா பெற தகுதி:
- வயது: குறைந்தபட்சம் 25
- தொழில் சாதனைகள்: கான்டெண்ட் கிரியேட்டரில் தனித்துவமான சாதனை
- பொருளாதார நிலைத்தன்மை மற்றும் வேலைத்திட்டம்
- பாஸ்போர்ட், தகுதியான ஆவணங்கள், முந்தைய வேலைகள் தொடர்பான சான்றுகள் போன்றவை தேவை.
Creators HQ 300-க்கும் மேற்பட்ட நிகழ்வுகளை நடத்தியுள்ளது. இது branding, video production, storytelling, audience engagement போன்ற துறைகளை மேம்படுத்த உதவுகிறது.
உலகில் பல்வேறு நாடுகளும் கிரியேட்டர்களுக்கு விசா வாய்ப்புகளை வழங்குகின்றன, ஆனால் UAE-யின் கோல்டன் வீசா திட்டம் மிகுந்த ஆதரவுடன் சிறந்த வாழ்க்கைமுறையையும் வழங்குகிறது.