சொந்த பிள்ளைகளை கடத்திய.. - தந்தை கைது!!
22 தை 2025 புதன் 18:16 | பார்வைகள் : 1659
5 மற்றும் 3 வயதுடைய இரு பிள்ளைகள் கடத்தப்பட்ட குற்றத்தில் அவர்களது தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
Beuvrages (Nord) நகரில் இச்சம்பவம் ஜனவரி 20, திங்கட்கிழமை பகல் இடம்பெற்றுள்ளது. 5 வயதுடைய முகமட் எனும் சிறுவனும், 3 வயதுடைய நஸீம் எனும் சிறுவனும், பகல் 1.10 மணி அளவில் rue Jean-Jaurès வீதியில் வைத்து கடத்தப்பட்டார்கள்.
அவர்கள் கடத்தப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டதன் பின்னர், உடனடியாக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டனர். முதலாவது சந்தேகநபராக அப்பிள்ளைகளின் தந்தை அடையாளம் காணப்பட்டார். 38 வயதுடைய அவர், வட ஆபிரிக்காவைச் சேர்ந்தவர் எனவும், அவரது BD-761-QQ இலக்கமுடைய Audi A3 மகிழுந்து அடையாளம் காணப்பட்டு, உடனடியாக பிள்ளைகள் மீட்கப்பட்டதாகவும், இருவரும் பூரண நலத்துடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிள்ளைகளை கடத்திய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.