Paristamil Navigation Paristamil advert login

Viry-Châtillon : பாடசாலை பேருந்து விபத்துக்குள்ளானது.. 15 மாணவர்கள் காயம்!!

Viry-Châtillon : பாடசாலை பேருந்து விபத்துக்குள்ளானது.. 15 மாணவர்கள் காயம்!!

23 தை 2025 வியாழன் 07:00 | பார்வைகள் : 812


நேற்று புதன்கிழமை நண்பகலின் பின்னர் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் 15 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளனர். 

பாடசாலை பேருந்து ஒன்று வீதியில் தரித்து நின்ற மற்றொரு பேருந்துடன் மோதுண்டது. இதில் பாடசாலை பேருந்து பெரும் சேதமடைந்தது. Viry-Châtillon (Essonne) நகரின் rue du Comte de Lambert வீதியில் இவ்விபத்து நேற்று பிற்பகல் 1.00 மணிக்கு இடம்பெற்றது.

விபத்தில் நடுநிலை வகுப்பைச் சேர்ந்த 12 மாணவர்களும், மூன்று உயர்கல்வி மாணவர்களும் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். மாணவர்களின் பெற்றோர்கள் அழைக்கப்பட்டனர். விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.