தொலைபேசி மூலம் ”au péage” செலுத்தியவருக்கு குற்றப்பணம்! - பொதுமக்கள் ஆதரவு..!!
23 தை 2025 வியாழன் 08:00 | பார்வைகள் : 1462
வீதி சுங்கவரிக்கட்டணத்தை (au péage) தொலைபேசி மூலம் செலுத்தியவ ஒருவருக்கு €90 யூரோக்கள் குற்றப்பணமும், ஓட்டுனர் உரிமத்தில் 3 புள்ளிகள் குறைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
21 வயதுடைய சமூகவலைத்தள பிரபலம் ஒருவர், கடந்த வாரத்தில் சுங்கச்சாவடி ஒன்றில் தனது தொலைபேசி மூலம் பணம் செலுத்தியுள்ளார். Apple Pay செயலியூடாக பணம் செலுத்திவிட்டு வீடு திரும்பியவருக்கு, 90 யூரோக்கள் குற்றப்பணம் அறவிடப்பட்டதோடு, ஓட்டுனர் உரிமத்தில் 3 புள்ளிகளும் குறைக்கப்பட்டிருந்தன. மகிழுந்தைச் செலுத்தும் போது அவர் தொலைபேசியை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டு அவருக்கு மேற்படி குற்றப்பணம் அறவிடப்பட்டிருந்தது.
அதை அடுத்து, இந்த விவகாரம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
சுங்கவரிக்கட்டணத்தை தொலைபேசி மூலம் செலுத்தும் போது, தொலைபேசி பாட்டுக்காக குற்றப்பணம் அறவிடப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் எனவும், இந்த குறையை உடனடியாக அரசு நீக்கவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபருக்கு ஆதரவாக இணையத்தில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.