கலைகளுக்கென ஒரு கல்லறை!!
20 பங்குனி 2018 செவ்வாய் 10:30 | பார்வைகள் : 18606
உலக மக்கள் பரிசுக்கு வருவதற்கு ஐந்து காரணங்கள் சொல்லுங்கள் என்றால்... அதில் ஒரு காரணம், உலகில்.. மிக அழகழகான கல்லறைகள் பரிசுக்குள் குவிந்திருப்பதை சொல்லலாம்... கல்லறைகள் எப்போதும் வெறுமனே கல்லறைகள் கட்டுமல்ல..!!
பரிசின் 20 ஆம் வட்டாரத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்தை நீங்கள் ஒருதடவை பார்வையிடவேண்டும். பெரும் தேவாலயங்களும் புராத கட்டிடங்களும் கொண்டுள்ள நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்டுள்ளது இந்த கல்லறைகள். இன்றை பிரெஞ்சு புதினத்தில் கலைஞர்கள் பலரின் உடல்களை தாங்கிக்கொண்டுள்ள கலைகளின் கல்லறை குறித்து பார்க்கலாம்.
PÈRE-LACHAISE கல்லறை !!
அமெரிக்காவின் பிரபல பாடகர் 'ரொக் ஸ்டார்' JIM MORRISON (1943-1971) இன் கல்லறை இங்குதான் உள்ளது. இளம் பாடகர் பாடலாசிரியர் என பல்முகம் கொண்ட இவர் தனது 27 வது வயதில் பரிசில் காலமானார். (இந்த கல்லறை முன்னதாக ஒருதடவை திருட்டுக்குள்ளாகி இருந்தது..)
ஐரிஸ் நாட்டு பாடலாசிரியர் + பாடகர், OSCAR WILDE (1854-1900) அவரின் கல்லறையும் இங்கு உள்ளது. அவசியம் பார்க்க வேண்டும் நீங்கள். அவர் பரிசில் உள்ள Hôtel d’Alsace உணவகத்தில் தங்கியிருந்தார். இவரின் அரை பகுதி சிலைக்கு பல முத்தங்களை இளம் பெண்கள் வாரி வழங்கியுள்ளதை நீங்கள் நேரில் சென்று பார்வையிடுங்களேன்..!!
கிரேக்க இசையின் பெட்டகம் என அழைக்கப்படும் FRÉDÉRIC CHOPIN (1810-1849) இல் கல்லறையும் இங்குதான் உள்ளது. இங்கிருப்பவற்றிலேயே மிக அழகான கல்லறை இது தான். கல்லறையைச் சுற்றி நடப்பட்டிருக்கும் பூ செடிகள் அதை மேலும் அழகாக்கின்றது.
இருக்கட்டும்,
இத்தாலி நாட்டின் கலைஞர் Amedeo Modigliani, அமெரிக்க எழுத்தாளர் Gertrude Stein, அமெரிக்க நடன அமைப்பாளர் pioneer Isadora, அமெரிக்காவின் ஒபேரா பாடகி Maria Callas என பல கலைஞர்கள் இங்கு மீளா துயில் கொள்கின்றனர்.
இவர்கள் அனைவரும் தங்கள் இறுதி காலத்தில் பரிசில் வசித்துள்ளனர். பரிசும் அவர்களை எப்போதும் நேசிக்கும்.
மொத்தமாக இதுவரை இங்கு, 70,000 உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன. !!
காலை 8 மணியில் இருந்து மாலை 5.30 மணிவரை திறந்திருக்கும். முகவரி : Cimetière du Père-Lachaise, 16 Rue du Repos, 75020.