Paristamil Navigation Paristamil advert login

புதிய S25 தொலைபேசிகள்.. பிரான்சில் விற்பனை எப்போது.. என்ன விலை??

புதிய S25 தொலைபேசிகள்.. பிரான்சில் விற்பனை எப்போது.. என்ன விலை??

23 தை 2025 வியாழன் 10:00 | பார்வைகள் : 767


சாம்சங் நிறுவனம் 2025 ஆம் ஆண்டுக்கான தங்களது S சீரீஸ் தொலைபேசிகளை நேற்று அறிமுகம் செய்து வைத்தது. பிரான்சில் எப்போது விற்பனைக்கு வருகிறது என்பதையும், என்ன விலைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன என்பதையும் தொகுத்து தருகிறது பரிஸ் தமிழ் இணையம்.
**

Samsung Galaxy S25, S25 Plus மற்றும் S25 Ultra ஆகிய மூன்று மொடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. சென்ற வருடம் மிகவும் வெற்றிகரமாக அமைந்த S24 தொலைபேசிகளின் இருந்து வடிவமைப்பில் பெரியளவில் மாற்றங்கள் கொண்டுவரப்படவில்லை என்றபோதும், OneUI 7 மூலம் பல்வேறு வசதிகளை சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

தொலைபேசி அழைப்புகளை உடனடியாக எழுத்தாக மாற்றுவது, தொலைபேசி அழைப்புக்களை மொழிமாற்றம் செய்வது, செயற்கை நுண்ணறிவு (A.I) மூலம் தினச் செயற்பாடுகளை மேம்படுத்துவது என பல வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

கேமராவில் சில மாற்றங்களையும், HDR10+ மற்றும் LOG வசதியுடன் காணொளிகளை பதிவு செய்ய முடியும் எனும் மாற்றத்தையும் கொண்டுவந்துள்ளது சாம்சங்.

நேற்று முதல் நாளில் இருந்து தொலைபேசிகளை முன்பதிவு செய்ய முடியும் எனவும், பெப்ரவரி மாதத்தின் மூன்றாவது வாரத்தில் இருந்து தொலைபேசிகளை வாங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை!

Samsung Galaxy S25
128 Go : 899 euros
256 Go : 969 euros
256 Go : 969 euros

Samsung Galaxy S25 Plus
256 Go : 1.169 euros
512 Go : 1.289 euros

Samsung Galaxy S25 Ultra
256 Go : 1.469 euros
512 Go : 1.589 euros
1 To : 1.829 euros

ஆகிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Samsung Galaxy S25 Ultra தொலைபேசிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நீல நிற தொலைபேசிகள் அதிகம் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.