Paristamil Navigation Paristamil advert login

ஈராக்கில் பெண்ணின் திருமண வயது தொடர்பில் சட்டத்திருத்தம்

ஈராக்கில் பெண்ணின் திருமண வயது தொடர்பில் சட்டத்திருத்தம்

23 தை 2025 வியாழன் 08:32 | பார்வைகள் : 575


ஈராக்கில் பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது.

தற்பொழுது திருமண வயதை 9 ஆக குறைத்து நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

குழந்தை திருமண தடைச்சட்டம் 1950யில் கொண்டு வரப்பட்டது. ஆனாலும் 28 சதவீத பெண்கள் 18 வயதிற்கு முன்பாகவே திருமணம் செய்துகொள்வதாக ஐ.நா ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

இந்த நிலையில், ஈராக் நாட்டில் பெண்ணின் திருமண வயதை 9 ஆக குறைக்க சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. 

முன்னர் 18 ஆக இருந்த நிலையில் 9 ஆக குறைக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. 

இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையிலும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டு தற்போது சட்டமாக மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி, ஈராக்கில் பெரும்பான்மையாக வசிக்கும் ஷியா முஸ்லிம் பெண்களின் திருமண வயது 9 ஆகவும், சன்னி முஸ்லிம் பெண்களின் திருமண வயது 15 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.