Paristamil Navigation Paristamil advert login

அதிரடி காட்டிய அபிஷேக் சர்மா... இந்தியா அபார வெற்றி

அதிரடி காட்டிய அபிஷேக் சர்மா... இந்தியா அபார வெற்றி

23 தை 2025 வியாழன் 08:54 | பார்வைகள் : 2780


பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அணி வென்றுள்ளது.

இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான முதல் டி20 போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. இதையடுத்து இங்கிலாந்து அணி துடுப்பாட்டத்தில் களமிறங்கியது.

அந்த அணியின் தொடக்க வீரர்களாக பிலிப் சால்ட் மற்றும் பென் டக்கெட் களமிறங்கினர். இதில் பிலிப் சால்ட் ரன் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து வெளியேறினார். பென் டக்கெட் 4 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.


அணித்தலைவர் ஜாஸ் பட்லர் நிலைத்து நின்று அரை சதம் கடந்தார். ஆனால் மறுமுனையில் மளமளவென விக்கெட்டுகள் சரிந்தன. இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி தடுமாறியது.

அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 68 ஓட்டங்களும், ஹாரி புரூக் 17 ஓட்டங்களும் எடுத்தனர். இது தவிர ஜாக்கோப் பெத்தேல்(7), ஜேமி ஓவர்டன்(2), கஸ் அட்கின்சன்(2) ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் இங்கிலாந்து அணி 20 ஓவர்களில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ஓட்டங்கள் எடுத்தது. இதையடுத்து 133 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடியது.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா இருவரும் அதிரடியாக விளையாடினர். சஞ்சு சாம்சன் 26 ஓட்டங்களில் வெளியேறினார். பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.


மறுமுனையில் அபிஷேக் சர்மா பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்டார் . சிறப்பாக விளையாடி அரை சதமடித்த அவர் 79 ஓட்டங்களில் வெளியேறினார்.

தொடர்ந்து திலக் வர்மா களமிறங்கி அவரது பங்கிற்கு அதிரடியாக விளையாடினார். இதனால் இந்திய அணி 12.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 133 ஓட்டங்கள் எடுத்தது. இதனால் 7விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்