Paristamil Navigation Paristamil advert login

எட்டாவது ஆண்டு "Nuit de la Solidarité"

எட்டாவது ஆண்டு

23 தை 2025 வியாழன் 11:00 | பார்வைகள் : 593


இரவு நேரத்தில் வீதிகளில் படுத்துறங்கும் அகதிகள் தொடர்பில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் Nuit de la Solidarité நிகழ்ச்சித்திட்டம் இன்று ஜனவரி 23, வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட உள்ளது.

தலைநகர் பரிஸ் மற்றும் அதன் புறநகர்களில் உள்ள பூங்காக்கள், மெற்றோ சுரங்கங்கள், மேம்பாலங்கள், மூடப்பட்ட கடை வாசல்கள் போன்றவற்றில் படுத்துறங்கும் அகதிகள் எண்ணப்பட்டு, அவர்களுக்கு தேவையான வசதிகளையும், தங்குமிடங்களையும் ஏற்படுத்திக்கொடுப்பதே Nuit de la Solidarité இன் நோக்கமாகும்.

இன்று மாலை முதல் அதிகாலை முதல் பல நூறு தன்னார்வலர்கள் (கிட்டத்தட்ட 1,500 பேர் எதிர்பார்க்கப்பட்டுள்ளது) இந்த பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எட்டாவது ஆண்டாக இவ்வருடம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ இதனை சென்ற 2018 ஆம் ஆண்டு ஆரம்பித்து வைத்திருந்தார்.

சென்ற 2024 ஆம் ஆண்டு பரிசில் 3,492 அகதிகள் வீதிகளில் படுத்துறங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.