'விடாமுயற்சி' மீண்டும் சென்சார் செய்யப்பட்டதா?
23 தை 2025 வியாழன் 11:23 | பார்வைகள் : 163
அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ படத்தின் சென்சார் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், தற்போது சில நிமிட காட்சிகள் இணைக்கப்பட்டு மீண்டும் சென்சார் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம், வரும் பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்தின் புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், இந்த படத்தின் சென்சார் தகவல் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது. அப்போது, சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு யுஏ சான்றிதழ் அளித்ததாகவும், இந்த படத்தின் ரன்னிங் டைம் 150 நிமிடங்கள் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில், தற்போது வந்துள்ள தகவல் படி, இந்த படத்தில் மூன்று நிமிட காட்சிகள் இணைக்கப்பட்டு உள்ளதாகவும் இதனை அடுத்து ரன்னிங் டைமிலும் மூன்று நிமிடம் அதிகமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வெளிநாட்டில் இந்த படத்திற்கு முன்பதிவு தொடங்கிவிட்ட நிலையில், தமிழகம் உள்பட இந்தியாவிலும் விரைவில் முன்பதிவு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித், அர்ஜூன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்பட பலர் நடித்திருக்கும் ’விடாமுயற்சி’ படம் நீரவ் ஷா மற்றும் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில், அனிருத் இசையில் இந்த படம் உருவாகி உள்ளது.