Concorde மெற்றோ நிலையம்! - சில தகவல்கள்..!!

19 பங்குனி 2018 திங்கள் 10:30 | பார்வைகள் : 21542
Concorde ; நாம் அடிக்கடி பயன்படுத்தும் மெற்றோ நிலையம் தான். இன்று இது குறித்து சில தெரியாத தகவல்களை தெரிந்துகொள்வோம்!
1, 8, 12 ஆகிய இலக்கங்களை கொண்ட மெற்றோ சேவைகள் இங்கு சேவையில் உள்ளன. முதலாம் வட்டாரத்தில் உள்ள Place de la Concorde இல் உள்ளது நிலையம்.
ஓகஸ்ட் 13, 1900 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த நிலையம், பரிசில் ஆரம்பிக்கப்பட்ட இரண்டாவது மெற்றோ நிலையமாகும்.
இன்றைய திகதியில், பரிசுக்குள் இருக்கும் மிக அழகான தொடரூந்து நிலையங்களில் இதுவும் ஒன்று. வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் இங்குள்ள சுரங்கத்தை ஆர்வமாக பார்த்துக்கொண்டே கடக்கின்றனர்.
ரோமன் எழுத்துக்களில் ஒவ்வொரு எழுத்துக்களாக பொறிக்கப்பட்ட 'டைல்ஸ்' இங்கு பதிக்கப்பட்டுள்ளமை ஒரு ஆச்சரியமான விடயம்.
1789 ஆம் ஆண்டு பிரெஞ்சு புரட்சியின் போது ஏற்பட்ட மனித உரிமைகள் தொடர்பான முக்கிய ஆவணமாகும்.
பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு கட்ட மாறுதலுக்கு உள்ளாகி வந்துள்ளது நிலையம். அடுத்தமுறை இங்கு சென்றால், 'டைல்ஸ்'இல் எழுதியுள்ள எழுத்துக்களில் கொஞ்சமாக வாசித்து பாருங்கள்..
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025