Paristamil Navigation Paristamil advert login

வெள்ளை சுனாமி Havre துறைமுகத்தில் இருந்து வருகிறது.

வெள்ளை சுனாமி Havre துறைமுகத்தில் இருந்து வருகிறது.

23 தை 2025 வியாழன் 11:43 | பார்வைகள் : 770


பிரான்சில்  cocaïne போதைவஸ்து பாவனை என்றுமில்லாத அளவுக்கு  அதிகரித்துள்ளது. இன்றைய நிலையில் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் குறித்த போதைவஸ்துக்கு அடிமையாகி உள்ளனர்.

கடந்த 2023-ம் ஆண்டைவிட 2024-ம் ஆண்டு இரண்டு மடங்கு cocaïne  போதைவஸ்து பிரான்ஸ்  தேசத்திற்குள் கடத்தப்பட்டுள்ளது.
2023-ல் 5.5 தொன் cocaïne போதைவஸ்து பிரான்சில் கைப்பற்றபட்ட நிலையில் 2024-ல் 49 தொன் cocaïne போதைவஸ்து காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட தொகையோ 49 தொண் எனும் போது காவல்துறைக்குத் தெரியாமலே தேசத்துக்குள் விநியோகிக்கப்பட்ட போதைவஸ்து எத்தனை தொன் எனும் வியப்பு ஏற்பட்டுள்ளது .

ஆண்டொன்றுக்கு பல மில்லியன்  கண்டைனர்கள் கடல் வழியாக வந்திறங்கும் Havre துறைமுகமே பிரான்சில் அதிகப்படியான cocaïne கடத்தலின் முதல் தளமாக விளங்குகிறது எனவேதான் 'வெள்ளை சுனாமி Havre துறைமுகத்தில் இருந்து வருகிறது' என பத்திரிகையாளர்கள் வர்ணிக்கின்றனர்.
    
cocaïne போதைவஸ்துச் சந்தையில் மிகவும் அதிகமான கறுப்பு பணம் உலவுவதும், பல கொலைகள், ஆட்கடத்தல்கள் நடப்பதும் இன்று பிரான்சில் அதிகரித்தும் உள்ளது.