ஒரு பாலியல் குற்றவாளியை சரியான விவாதம் இல்லை என கூறி விடிவிப்பு.
23 தை 2025 வியாழன் 12:26 | பார்வைகள் : 1734
தன் மனைவியின் முதல் முதல்தாரத்தின் 13 வயது மகளை படுக்கை அறையில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றவாளியை சரியான ஆதாரங்களும், விவாதங்களும் இல்லை என்று காரணம் கூறி பிரான்ஸ் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
முதலில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 'இது தவறானது நான் நிரபராதி என்னை விடுதலை செய்யவேண்டும்' என மேல் முறையீடு செய்யப்பட்ட வழக்கிலேயே சரியான ஆதாரங்களும் எதிர்தரப்பில் முறையான விவாதங்களும் இல்லையென குற்றவாளி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் தெரிவிக்கையில் "முதலில் நீதி நிலைக்கிறது என்று எண்ணியியுந்தேன், இன்று நீதி செத்துவிட்டது என எண்ணுகிறேன், அவரை விடுதலை செய்யப்பட்ட நாளில் இருந்து நாங்கள் மிகுந்த பயத்தோடு வாழ்கிறோம்" என தெரிவித்துள்ளார்