Arc de Triomphe கீழ் விபத்து ஏற்பட்டால் என்ன ஆகும்??!
18 பங்குனி 2018 ஞாயிறு 12:30 | பார்வைகள் : 18571
சோம்ஸ்-எலிசேயின் மேற்கு மூலையில் கம்பீரமாய் நின்றிருக்கும் இந்த Arc de Triomphe குறித்து ஒரு தொகை தகவல்கள் முன்னதாக உங்களுக்கு பிரெஞ்சு புதினத்தில் வழங்கியிருந்தோம். இருந்தாலும் இன்னமும் ஆச்சரியம் குறையவில்லை.
50 மீட்டர்கள் உயரம் கொண்ட இந்த துதியில் ஏறுவதற்கு 284 படிக்கட்டுக்கள் உண்டு. இடையில் ஓய்வெடுப்பதற்கு வாய்ப்புகளே இல்லாமல், துதியின் ஒரு பக்க கால்களுக்குள்ளே வளைந்து வளைந்து செல்லும் படிக்கட்டில் ஏறினால், முதலாவது தளத்துக்கு வந்துவிடுவீர்கள்.
படிக்கட்டில் ஏறி முடிந்ததும் எதிரே கதிரைகள் தென்படும். அப்பாடா என நீங்கள் ஓடிச்சென்று இருந்தால்., துதியின் எப்பகுதியில் நீங்கள் இருக்கின்றீர்கள் என 'லொகேஷன்' பதிக்கப்பட்டிருப்பதை காண்பீர்கள்.
அதற்கு மேலே மற்றுமொரு சிறிய படிக்கட்டுகள் உண்டு.. அதன் வழியாக மீண்டும் ஏறினால், 'மொட்டைமாடி' க்கு வந்துவிடுவீர்கள். ஈஃபிள் கோபுரத்தில் இருந்து இதனை அடிக்கடி பார்த்திருப்பீர்கள்... ஒரு மாற்றுக்கு, இங்கிருந்து ஈஃபிள் கோபுரத்தை பார்வையிடலாம்..
ஈபிள் கோபுரத்தின் மொத்த அழகையும் இங்கிருந்து நிறுத்தி நிதானமாக பார்க்கலாம்.. டெதஸ்கோப் ஒன்றை கையோடு எடுத்துச் செல்லுங்கள்..
அதை விடுங்கள்... நாம் என்ன பேசிக்கொண்டிருந்தோம்...? Arc de Triomphe கீழ் விபத்து ஏற்பட்டால் என்ன ஆகும் என்றா..??
சட்டம் என்ன சொல்கிறதென்றால்... Arc de Triomphe கீழ் விபத்து ஏற்பட்டு, Arc de Triomphe க்கு சேதம் ஏற்பட்டால், யார் மீது குற்றம் என்றாலும் சரி, சேதத்தில் காப்பீடு நிறுவனம் 50 வீதமும், வாகனச் சாரதி 50 வீதமும் செலுத்தவேண்டும். மறு கதை கிடையாது!!