சிவகார்த்திகேயன் 25வது படத்தின் டைட்டில் இதுவா?
23 தை 2025 வியாழன் 14:01 | பார்வைகள் : 164
சிவகார்த்திகேயன் நடிக்கும் 25 வது திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்க போவதாக கடந்த சில வாரங்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியான நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் ஜெயம் ரவி நடிக்க இருப்பதாகவும், அதர்வா ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி இந்த படத்தின் மூலம் பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா தமிழுக்கு அறிமுகம் ஆகிறார் என்றும் செய்திகள் வெளியானது. ஜிபி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படம் அவரது 100வது படம் என்ற பெருமைக்குரியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் சுமார் 2 நிமிட டீசர் தயாராக இருப்பதாகவும் அந்த டீசர் சென்சார் ஆகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த சென்சார் தகவல் படி இந்த படத்திற்கு ’பராசக்தி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த முதல் திரைப்படத்தின் டைட்டில் ’பராசக்தி’ என்ற நிலையில் சிவகார்த்திகேயனின் 25 வது வருடத்திற்கு சுதா கொங்கரா, ஒரு ஸ்பெஷல் டைட்டிலை தேர்வு செய்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த டீசர் வரும் 26ஆம் தேதி குடியரசு தின ஸ்பெஷலாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.