'Grippe' தடுப்பூசி பிரச்சாரம் வரும் பெப்ரவரி மாதம் வரை நீடிப்பு.
23 தை 2025 வியாழன் 16:41 | பார்வைகள் : 586
பிரான்ஸ் அதிக தீவிரம் கொண்ட பருவகால காய்ச்சல் 'Grippe' தொற்றுநோயை இவ்வாண்டு எதிர்கொண்டுள்ளதால், தடுப்பூசி பிரச்சாரம் பிரான்சில் வரும் பெப்ரவரி 28 வரை ஒரு மாதம் நீடிக்கப்பட்டுள்ளது என புதன்கிழமை (22/10) அன்று சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
பிரான்ஸ் மருத்துவமனைகளில் அவசரகால பிரிவில் காணப்படும் நோயாளிகளின் அதிகமான வரவும், தொற்று நோயினால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையிலேயே, ஜனவரி 31-ம் திகதி முடிவுக்கு வரவேண்டிய தடுப்பபூசி பிரச்சாரம் பெப்ரவரி மாதம் 28-ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள், 65 வயதிற்குட்பட்டவர்களில் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்கள், அல்லது தீவிர காய்ச்சல் மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்கள், மற்றும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது "கடுமையாக பரிந்துரைக்கப்படுகிறது" என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.