Paristamil Navigation Paristamil advert login

மேற்குகரையை இணைத்துக்கொள்ள இஸ்ரேல் ஆர்வம் - ஐக்கிய நாடுகள் எச்சரிக்கை

மேற்குகரையை இணைத்துக்கொள்ள இஸ்ரேல்  ஆர்வம் - ஐக்கிய நாடுகள் எச்சரிக்கை

23 தை 2025 வியாழன் 17:18 | பார்வைகள் : 407


இஸ்ரேல் மேற்குகரையை தன்னுடன் இணைத்துக்கொள்ள உள்ளதாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரித்துள்ளார்.

டாவோஸில் இடம்பெறும் உலக பொருளாதார போராத்தின் உச்சிமாநாட்டில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் மேற்குகரைய தன்னுடன் இணைத்துக்கொள்வதற்கான தருணம் இது என இஸ்ரேல் கருதும் ஆபத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

காசா குறித்து இஸ்ரேல் ஆர்வமாக உள்ளதா என்பது தெரியவில்லை ஆனால் மேற்குகரை குறித்து இஸ்ரேல் ஆர்வம் கொண்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

காசாவில் ஹமாசிற்கும் இஸ்ரேலிற்கும் இடையில் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்த உதவியமைக்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவரால் அந்த நேரத்தில் வலுவான பங்களிப்பு வழங்கப்பட்டது என ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்

மேற்குகரையில் உள்ள ஜெனினில் தீவிரவாத அமைப்புகளிற்கு எதிரான நடவடிக்கையில்  இஸ்ரேலிய படையினர் ஈடுபட்டுள்ள நிலையிலேயே ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இஸ்ரேலின் இந்த நடவடிக்கை காரணமாக நால்வர் காயமடைந்துள்ளனர் என பாலஸ்தீனிய அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் இரும்புசுவர் என்ற நடவடிக்கையை செவ்வாய்கிழமை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.