Paristamil Navigation Paristamil advert login

■ Tempête Éowyn : பரிஸ் மற்றும் இல் து பிரான்சுக்குள் மழை!!

■ Tempête Éowyn : பரிஸ் மற்றும் இல் து பிரான்சுக்குள் மழை!!

23 தை 2025 வியாழன் 18:05 | பார்வைகள் : 930


நாட்டின் வடக்கு எல்லையோர மாவட்டங்களை தாக்கும் என எதிர்வுகூறப்பட்ட Tempête Éowyn புயல், இல் து பிரான்சின் சில மாவட்டங்களை தாக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் பரிஸ் மற்றும் இல் து பிரான்சின் சில மாவட்டங்களில் இந்த புயலின் தாக்கம் இருக்கும் என Météo France அறிவித்துள்ளது. வேகமான காற்றும் பலத்த மழையும் பதிவாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. நாளை, ஜனவரி 24 வெள்ளிக்கிழமை புயல் கரையைக் கடக்க உள்ள நிலையில், இன்று இரவு முதலே 32 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Yvelines மற்றும் Val-d'Oise ஆகிய இரு மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், பரிஸ், Hauts-de-Seine, Seine-Saint-Denis மற்றும் Val-de-Marne மாவட்டங்களில் வேகமான காற்று வீசும் எனவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.