Wallace fountain குடிநீர்! - ஒரு சுருக்கமான வரலாறு!!

17 பங்குனி 2018 சனி 12:30 | பார்வைகள் : 22188
பரிஸ் முழுவதும் இந்த புகைப்படத்தில் காண்பது போன்ற சிலைகளை பார்த்திருப்பீர்கள். கடும் பச்சை நிறத்தில் உள்ள இந்த சிலையில் இருந்து இலவசமாக குடிநீர் பெற்றுக்கொள்ளலாம். இந்த தகவல் உங்களுக்கு தெரிந்தே இருக்கும்... அப்படியென்றால் சில தெரியாத தகவல்கள் சொல்கிறோம்...
பரிசில் வாழ்ந்த Richard Wallace எனும் ஆங்கிலக்காரர் இந்த திட்டத்துக்கு நிதி உதவி வழங்கியதால் இதற்கு அவரது பெயரையே சூட்டியுள்ளனர்.
பின்னணி மிகச் சிறியது. பிரெஞ்சு- பெருசியன் யுத்தம் முடிவுக்கு வந்ததும், பரிசை மிக வேகமாக மீள் நிர்மாணம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது. முன்னதாக இருந்த சில கட்டிடங்கள் திருத்தப்பட்டதோடு, சில புதிய கட்டிடங்கள்... வீதிகள் புணரமைப்பு பணிகளும் இடம்பெற்றது. அப்போது பெரும் செல்வந்தராக இருந்த Richard Wallace, தன்னுடைய பணம் பரிஸ் மக்களுக்கு பயன்படவேண்டும் என இந்த திட்டத்துக்கு உதவ முன் வந்தார்.
1872 ஆம் ஆண்டில் இருந்து இந்த இலவச குடிநீர் சேவைகள் வழங்கப்படுகின்றன.
இந்த சிலை வடிவத்தை Charles-Auguste Lebourg என்பவர் வடிவமைத்தார். இவர் 19 ஆம் நூற்றாண்டில் மிக புகழ்பெற்ற சிற்பி. இவரின் கைவண்ண சிலைகளை Musée d'Orsay இல் பார்வையிடலாம்...
கடும் பச்சை இல்லாமல் தற்போது 'பிங்' வண்ணத்திலும், சிவப்பு, மஞ்சள், செம்மஞ்சள் போன்ற வர்ணத்திலும் இவை மீண்டும் வர்ணம் பூசப்பட்டுள்ளன.
பரிசை தாண்டி உலகின் பல்வேறு நகரங்களில் இந்த சிலை வடிவ நீர்வழங்கி அமைக்கப்பட்டுள்ளன. அருகில் இலண்டன் நகரில் கூட காணலாம்!!
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025