பிறப்பால் குடியுரிமை தொடர்பான டிரம்ப் உத்தரவு: தற்காலிக தடை விதித்தது நீதிமன்றம்!

24 தை 2025 வெள்ளி 03:35 | பார்வைகள் : 5113
பிறப்பால் குடியுரிமை தொடர்பான டிரம்பின் நிர்வாக ஆணையை அமல்படுத்துவதற்கு, அமெரிக்கா மாவட்ட நீதிபதி ஜான் கோஹனூர் தற்காலிக தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப், ஜனவரி 20ம் தேதி பதவியேற்றார். முதல் நாளிலேயே, பிறப்பால் குடியுரிமை வழங்கப்படுவதில் சில கட்டுப்பாடுகளை விதித்து அவர் உத்தரவு பிறப்பித்தார். அதன் படி, 'சட்டவிரோதமாக அமெரிக்காவில் வசிக்கும் பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பால் குடியுரிமை வழங்கப்படாது.
தற்காலிகமாக, அதாவது வேலைக்காக அமெரிக்காவுக்கு வந்தவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் தானாகவே குடியுரிமை வழங்க முடியாது என கூறப்பட்டது. இந்த உத்தரவு பிப்ரவரி 19ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து, 22 அமெரிக்கா மாகாணங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன.
இந்நிலையில், பிறப்பால் குடியுரிமை தொடர்பான டிரம்பின் நிர்வாக ஆணையை அமல்படுத்துவதற்கு, அமெரிக்கா மாவட்ட நீதிபதி ஜான் கோஹனூர் தற்காலிக தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். 'இது என் மனதைக் குழப்புகிறது, இந்த உத்தரவு அரசியல் சட்டத்திற்கு எதிரானது' என்றார்.
இதற்கிடையே, பிறப்பால் அமெரிக்க குடியுரிமை வழங்குவதற்கு தடை விதித்து அதிபர் டிரம்ப் பிறப்பித்த உத்தரவு பிப்.,19 ல் நடைமுறைக்கு வர உள்ளதால், அதற்குள் சிசேரியன் அறுவை சிகிச்சை செய்து குழந்தை பெற்றுக் கொள்வது குறித்து ஆலோசனை பெறுவதற்காக கர்ப்பிணிகள் பலர் மருத்துவமனைகளை நாடி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1