புதிய கல்வி ஆண்டில் 3,200 மாணவர்கள் வருகை வீழ்ச்சி!!
24 தை 2025 வெள்ளி 07:00 | பார்வைகள் : 871
2026 ஆம் ஆண்டுக்கான புதிய கல்வி ஆண்டு வரும் செப்டம்பரில் ஆரம்பிக்கும் போது பரிசில் கணிசமான மாணவர்களின் வருகை வீழ்ச்சியடைந்திருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
தலைநகர் பரிசில் இருந்து மக்கள் வெளியேறுவது ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து செல்கிறது. பரிஸ் மக்கள் தொகை தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருகிறது. அதன் ஒரு அங்கமாக பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையும் வீழ்ச்சியடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வரும் செப்டம்பரில் புதிய கல்வி ஆண்டு ஆரம்பிக்கும் போது கிட்டத்தட்ட 3,200 மாணவர்களின் வருகை வீழ்ச்சியடையும் என தெரிவிக்கப்படுகிறது.
2023 ஆம் ஆண்டு பாடசாலை ஆரம்பித்திருந்த போது 2,690 மாணவர்களின் வருகையும், 2024 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் 2,031 மாணவர்களின் வருகையும் வீழ்ச்சியட்சிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.