Éowyn புயல்! - இன்று இரவு கரையை கடக்கிறது.. Morbihan மாவட்டத்துக்கு எச்சரிக்கை!

24 தை 2025 வெள்ளி 09:02 | பார்வைகள் : 3877
ஐரோப்பாவினை சூழ்ந்துள்ள Tempête Éowyn புயல் இன்று இரவு கரையைக் கடக்கிறது. பிரான்சின் சில மாவட்டங்களில் மழை மற்றும் வேகமான காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Morbihan மாவட்டத்தில் இன்று மாலை முதல் தொடர் மழை பெய்யும் எனவும், அதிகபட்சமாக 40 மி.மீ மழை பதிவாகும் எனவும், பல இடங்களில் வெள்ள அனர்த்தம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 நாட்களுக்குரிய மழை அடுத்த 24 மணிநேரத்தில் கொட்டித்தீர்க்கும் என Météo France அறிவித்துள்ளது.
ஜனவரி 24, இன்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணிமுதல் நாளை சனிக்கிழமை காலை 6 மணிவரை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.