Paristamil Navigation Paristamil advert login

Musée du Parfum- வாசனைகளில் ஒரு வாழ்வு!!

Musée du Parfum- வாசனைகளில் ஒரு வாழ்வு!!

16 பங்குனி 2018 வெள்ளி 10:30 | பார்வைகள் : 18786


பிரெஞ்சு தேசம் காதலுக்கு மட்டுமல்ல, வாசனைத் திரவியங்களுக்கும் மிக புகழ்பெற்றது. வெளிநாடுகளில் சில 'ஒன்றுக்கும் உதவாத' திரவியங்களை எல்லாம் 'பிரெஞ்சு பர்ஃபியூம்!' என பொய் சொல்லி விற்கும் அளவுக்கு பெயர் போனது பிரெஞ்சு வாசனைத் திரவியங்கள்... 
 
உலகில் மிக விலை மதிப்பு அதிகம் கொண்ட வாசனைத் திரவியங்கள் எல்லாம் பிரான்சில் உண்டு. சாதாரண மனிதர்கள் நம்மளால் வாங்க முடியாத விலைகளில் எல்லாம் உள்ள இந்த திரவியங்களின் வாசனை எப்படி இருக்கும்??
 
அதை முகர்ந்து பார்க்க ஒரு வாய்பு உள்ளது. அதுவும் இலவசமாக.. 
 
பிரெஞ்சு வாசனைத் திரவிய விறபன்னர்களான Fragonard நிறுவனம் ஒரு அருங்காட்சியகத்தை திறந்துள்ளது. Musée du Parfum எனும் இந்த அருங்காட்சியகத்தில், உங்களுக்கு பயனுள்ள பல ஆச்சரிய தகவல்கள் கொட்டி கிடக்கின்றன. உதாரணத்துக்கு வாசனை திரவியங்கள் எப்படி தயாரிக்கிறார்கள்... அதன் வரலாறு.. பயன் படுத்தும் பொருட்கள்.. மூலப்பொருட்களை எங்கிருந்தெல்லாம் இறக்குமதி செய்கிறார்கள் என பல தகவல்கள் இங்கு கிடைக்கின்றன. 
 
தவிர், ஒலிபெருக்கி குழாய் போன்று காணப்படும் இடத்தில் நீங்கள் உங்கள் மூக்கை நீட்டி, வாசனை பிடித்தால்... அட்டகாசமாக வாசனையை நீங்கள் உணர முடியும். இது போன்று ஒவ்வொரு 'ஃப்ளேவ'ருக்கும் ஒவ்வொரு குழாய் உண்டு. தவிர ஆப்பிள் பழம் அளவில் உள்ள சில உருண்டைகளையும் முகர்ந்து பார்த்தால் ஒவ்வொரு வித வாசனைகள் வரும்.  
 
ஒவ்வொன்றினதும் விலை ஆயிரம் யூரோக்கள் தொடக்கம் ஐந்தாயிரம் யூரோக்கள் வரை.. (ஓமோம்..ஒரு சிறிய போத்தலின் விலை தான்...) 
 
ஆனால் நீங்கள் பயப்பிட வேண்டியதில்லை... உங்களிடம் பணம் கேட்கமாட்டார்கள்... முல்லா கருவாட்டு வாசனை பிடித்தது போல் நீங்களும் வாசனை பிடித்துவிட்டு வரலாம்...
 
முகவரி: 73 Rue du Faubourg Saint-Honoré, 75008 Paris. தொலைபேசி : +33 1 42 65 25 44

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்