Paristamil Navigation Paristamil advert login

முன்னாள் இந்திய வீரர் சேவாக் - ஆர்த்தி விவாகரத்தா...? கிரிக்கெட் உலகம் அதிர்ச்சி!

முன்னாள் இந்திய வீரர் சேவாக் - ஆர்த்தி விவாகரத்தா...? கிரிக்கெட் உலகம் அதிர்ச்சி!

24 தை 2025 வெள்ளி 09:21 | பார்வைகள் : 123


பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக்-ஆர்த்தி தம்பதி தங்களது திருமண வாழ்க்கையில் இருந்து விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நமது நாட்டின் முன்னணி கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான வீரேந்திர சேவாக் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ஆகியோர் விவாகரத்து செய்ய உள்ளதாக வெளியாகியுள்ள செய்தி, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட இத்தம்பதி, 21 ஆண்டுகால திருமண வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்ததாகவும், இதனால் தனித்தனியாக வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.


சமூக வலைதளங்களில் ஒருவரை ஒருவர் unfollow செய்து கொண்டது, இந்த விவாகரத்து முடிவுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இருவரும் விரைவில் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து குறித்து அறிவிப்பு வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தம்பதிக்கு 2007 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் இரண்டு மகன்கள் பிறந்தனர்.