Paristamil Navigation Paristamil advert login

ஐசிசி ஒருநாள் அணி அறிவிப்பு - அணித்தலைவரான அசலங்க

ஐசிசி ஒருநாள் அணி அறிவிப்பு - அணித்தலைவரான அசலங்க

24 தை 2025 வெள்ளி 09:25 | பார்வைகள் : 124


2024 ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி சிறந்த ஆடவர் ஒருநாள் கனவு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், இலங்கை அணியின் சரித் அசலங்க அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2024 ஆம் ஆண்டில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஜொலித்த 11 பேர் கொண்ட வீரர்களை தேர்வு செய்து ஐசிசி சிறந்த கனவு அணியாக அறிவித்துள்ளது.

மேலும், இலங்கை அணியின் நான்கு வீரர்கள் இந்த அணியில் இடம்பிடித்துள்ளமை விசேடம்சமாகும்.

அதன்படி, பெத்தும் நிஸ்ஸங்க, குசல் மெந்திஸ், சரித் அசலங்க மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

அதேபோல், அணியில் சைம் அயூப் (பாகிஸ்தான்), ரஹ்மானுல்லா குர்பாஸ் (ஆப்கானிஸ்தான்), ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் (மேற்கிந்திய தீவுகள்), அஸ்மத்துல்லா ஓமர்சாய் (ஆப்கானிஸ்தான்), ஷாஹீன் ஷா அப்ரிடி (பாகிஸ்தான்), ஹரிஸ் ரவுஃப் (பாகிஸ்தான்) மற்றும் ஏஎம் கசன்ஃபர் (ஆப்கானிஸ்தான்) ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.