திருமண வாழ்க்கை குறித்து மனம் திறந்த கீர்த்தி சுரேஷ்
24 தை 2025 வெள்ளி 09:14 | பார்வைகள் : 234
கீர்த்தி சுரேஷ் தான் இப்போது டாப் டிரெண்டிங்கில் இருக்கிறார். கடந்த சில மாதங்களாக அவர் தான் அடிக்கடி தலைப்புச் செய்திகளில் சிக்கினார். 15 வருடங்களாக காதலித்து வந்த ஆண்டனி தட்டில் என்பவரை கடந்த ஆண்டு கோவாவில் திருமணம் செய்து கொண்டார். கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி தட்டில் திருமண நிகழ்ச்சியில் நடிகர் விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் கலந்து கொண்டனர். இதில், விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் தனி விமானத்தில் புறப்பட்டு சென்றது விவாதத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து ஆண்டனி தட்டில் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் ஹனிமூன் சென்றனர். தாய்லாந்து சென்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து பேபி ஜான் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கீர்த்தி சுரேஷ் தாலியுடன் கலந்து கொண்டார். இது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அதன் பிறகு சென்னையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கீர்த்தி சுரேஷ் தனது கணவருடன் கலந்து கொண்டார். அவரது மேனேஜரின் அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழா கொண்டாட்டத்தில் கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் விஜய்யுன் கலந்து கொண்டு பொங்கல் நிகழ்ச்சியை சிறப்பித்தார். இந்த நிலையில் தான் பேட்டியில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷ் தனது திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பது குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதில் சோஷியல் மீடியாவிலிருந்து ஒதுங்கியிருக்கும் எனது கணவருக்கு இது புதுசு. இன்ஸ்டா அக்கவுண்டை கூட பிரைவேட்டா தான் வச்சிருக்காரு. அவர், கூச்ச சுபாவம் கொண்டவர். மீடியா அட்டென்ஷன் எல்லாம் அவருக்கு கிடையாது. ஆனால், எனக்கு இது பழகிவிட்டது. எங்கு சென்றாலும் போட்டோ, வீடியோ எடுக்குறாங்க. எனக்கு எப்போதும் போன்று தான் இப்போதும் இருக்கிறது. என்னுடைய கணவருக்கு இந்த ஒரு விஷயம் தான் சங்கடத்தை கொடுக்கிறது. எனினும் என்னுடைய சினிமா வாழ்க்கைக்கு இது முக்கியம் என்பதை அவர் புரிந்து அதற்கேற்ப நடந்து கொள்கிறார் என்று கூறியுள்ளார்.
தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கான பேபி ஜான் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இந்தப் படம் பெரிய அளவிற்கு வரவேற்பு பெறவில்லை. இப்பொது கன்னிவெடி, ரிவால்வர் ரீட்டா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் என்ற தமிழ் படத்தின் மூலமாக ஹீரோயினாக அவதாரம் எடுத்தார். ரஜினிமுருகன், ரெமோ, சாமி ஸ்கொயர், சர்கார், அண்ணாத்தா, மாமன்னன் என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார். நயன் தாராவைப் போன்று ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளையும் தேர்வு செய்து நடித்திருக்கிறார். இவ்வளவு ஏன் மகாநடி படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் வென்றுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.